சென்னை:
கோயில்கள் சார்பாக ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும் திட்டத்திற்குத் தேவையான பற்றாக்குறை நிதியை அன்னதானத்திட்ட மைய நிதியிலிருந்து வழங்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-"தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நோயினால் பெரும்பாலான ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து அன்றாட வாழ்க்கைக்கு போராடி வரும் நிலையில், அவர்களது பசியினைப் போக்கும் விதமாக, திருக் கோயில்களில் இருந்து உணவுப் பொட்டலங்களை உணவு தேவைப் படுவோருக்கு வழங்கிடுமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரால் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது.
திருக்கோயில்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு பொட்டலங்களாக நாள்தோறும் ஏழை எளியோருக்கு இம் மாதம் 12ஆம் தேதி முதல் வழங்கப் பட்டு பொதுமக்கள் அதிகளவில் பயன்பெறும் திட்டமாக வரவேற்பைப் பெற்றுள்ளது.ஊரடங்கு காலம் நீட்டிக்கப் பட்டுள்ள நிலையில், ஜூன் மாதம் ஐந்தாம் தேதி வரைக்கும் உணவுப் பொட்டலங்களை வழங்க திருக் கோயில் நிர்வாகங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.இச்சேவை தொடரும் நிலையில், 349 திருக் கோயில்களில் போதிய நிதி ஆதாரம் இல்லாதது அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், திருக்கோயில்களுக்கு இத்திட்டத் திற்கு தேவைப்படும் நிதி ஆதாரத்தினை கணக் கிட்டதில் ரூ.2 கோடியே 51 லட்சத்து 7,647 தேவைப் படுகிறது.கொரோனா பெருந் தொற்றுக் காலத்தில் உணவு தேவைப்படு வோருக்கு திருக் கோயில்கள் வாயிலாக உணவுப்பொட்டலங்களைத் தொடர்ந்து வழங்க தேவைப் படும் நிதியை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் பேணப்பட்டு வரும் அன்னதான திட்ட மைய நிதியில் இருந்து திருக்கோயில்களுக்கு வழங்க அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.