சேலம், செப். 13- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொரு ளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர் கைவினைக் கலைஞர்க ளுக்கு கடனுதவி வழங்கும் திட்டம் அறிமு கப்படுத்தப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் சி.அ.ரா மன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித் ததாவது, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர் கைவினைக் கலைஞர்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையின இனத்தைச் சார்ந்தவர்களான முஸ்லீம், கிறித்தவர், ஜெயின், சீக்கியர், பார்சி, புத்த மதத்தைச் சார்ந்த கைவினைக் கலை ஞர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான மூலதனப் பொருட்களை வாங்கி தங்களது தொழிலில் முன்னேற்றம் அடைந்திட உதவி டும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடனுதவி வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விரும்பும் சிறுபான்மையின கைவினைக் கலைஞர்களின் ஆண்டு வருமானம் கிராமப் புறங்களில் ரூ.98 ஆயிரத்திற்குள் மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.1 லட்சத்து 20 ஆயி ரத்திற்குள் இருக்க வேண்டும். இத்திட் டத்தின் கீழ் அதிகபட்ச கடன் தொகை ரூ.10 லட்சம் வழங்கப்படும். மேலும், கடனுதவி பெறும் ஆண் பயனாளிகளுக்கு ரூ.5 மற்றும் பெண் பயனாளிகளுக்கு ரூ.4 என்ற ஆண்டு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். பெறப்படும் கடனை 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும். மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இக்கழகத்தின் மூலம் வழங்கப்படும் கடனுதவி விண்ணப்பங்கள் மற்றும் இதர கடனுதவி விவரங்களை https://tamco.tn.gov.in என்ற இணையதள முகவரி அல்லது சேலம் மாவட்ட ஆட்சி யரகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் நல அலுவலகம், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகள் ஆகியவற்றில் நேரில் பெற்றுக் கொள் ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.