திருப்பூர், ஜன. 4- திருப்பூர் அருகே வள்ளிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊராட்சி மன்ற தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது. திருப்பூர் ஒன்றியம், வள்ளிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சிபிஎம் வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் போட்டியிட்டனர். இதில் மாரக் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முருகேசன் 1373 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் கணக்கம்பாளை யம் ஊராட்சியில் 3 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு உஷா நந்தினி சண்முகசுந்தரம் 329 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதே ஊராட்சியில் 6 வார்டு உறுப்பினர் பதவிக்கு வேலுமணி வெள்ளிங்கிரி 215 வாக்குகள் பெற்று வெற்றி பெற் றுள்ளார். ஊத்துக்குளி ஒன்றியம், புஞ்சை தளவாய்பாளையம் ஊராட்சி தலை வராக சுயேட்சை வேட்பாளர் பழனி யம்மாள் வெற்றி பெற்றார். 4ஆவது வார்டில் தேவிராணி, 9ஆவது வார் டில் நித்யா ஆகிய சுயேட்சை வேட் பாளர்கள் வெற்றி பெற்றனர்.