tamilnadu

img

அவிநாசியில் போலி முட்டைகள் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

அவிநாசி, நவ. 14- அவிநாசி வாரச்சந்தை யில், விற்பனைக்காக வைக் கப்பட்டிருந்த போலி முட்டைகளை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். அவிநாசி வாரச்சந்தையில் சாயம் கலந்த போலி முட்டைகள் விற்பனை செய் யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறையின ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவிநாசி வாரச்சந்தையில் உணவு பாதுகாப்புத்துறை நிய மன அலுவலர் பா.விஜயல லிதாம்பிகை தலைமையில், வட்டார அலுவலர்கள் ஆர்.பாலமுருகன், சதீஷ்கு மார் ஆகியோரடங்கிய குழுவினர் புதன் கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சேலம் பகுதியிலிருந்து சாயம் ஏற்றப்பட்ட 250க்கும் மேற்பட்ட போலி நாட்டுக் கோழி முட்டைகள் விற்பனைக் காக கொண்டு வரப்பட்டிருந்தது கண்ட றியப்பட்டது. இந்த முட்டைகள் பொதுமக்களுக்கு நாட்டுக் கோழி முட்டைகள் என்ற பெய ரில் ரூ.6 முதல் ரூ.7 வரை விற்பனை செய் யப்பட்டு வந்தது. போலி நாட்டுக்கோழி முட்டைகளைப் பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத்துறையினர் முதல் முறை என்ப தால் சந்தை வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.