தரங்கம்பாடி ஜூலை 6- நாகை மாவட்டம் பொறையார் அருகே சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது. எம்.எல்.ஏ.,பவுன்ராஜ், 315 மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்களை வழங்கி உரையாற்றினார். முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுலலர்(சீர்காழி) குமார், தலைமையாசிரியர் அசோக், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் உதயசங்கர், விசலூர் கண்ணன், பெற்றோர்- ஆசிரியர் கழக செயற்குழு உறுப்பினர் இராசையன், உதவித் தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக உதவி தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.