பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி முத்தமிழ்ப் பாசறை சார்பில் தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வுகளை நினைவூட்டும் வகையில் 11 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழா நடைபெற்றது. விழாவில் தமிழன்னை ஊர்வலம் நடைபெற்றது. காவல் துணை ஆய்வாளர் மாயழகு, போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மேரி ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். சிலம்பம், கோலாட்டம் உள்ளிட்டவையுடன் தாரை தப்பட்டை முழங்க நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து இயல் அரங்கம் நடைபெற்றது. முத்தமிழ்ப் பாசறை தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். திரைப்பட நடிகர் தம்பி இராமையா பேசினார். இதில் பாசறையின் அறங்காவ லர்கள், புரவலர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.