பாரத் ஸ்டேட் வங்கி தேர்வு பொங்கல் அன்று நடக்க இருக்கும் நிலையில், தேர்வு தேதி மாற்றப்பட வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு, முதல் நிலை தேர்வு கடந்த நவம்பர் 12-ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த 2-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான, முதன்மை தேர்வுக்கான தேர்வு, ஜனவரி 15-ஆம் தேதி பொங்கலன்று நடக்க இருப்பதாக எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது. இந்த நிலையில், தேர்வு தேதி மாற்றப்பட வேண்டும் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து டிவிட்டரில், ”தமிழர் திருநாளில் தேர்வு. பாரத ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 15 பொங்கல் தமிழர் திருநாளில் அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தேர்வுத் தேதி மாற்றப்பட வேண்டும்” என்று சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.