tamilnadu

img

தென் மண்டல யோகா போட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை

பொன்னமராவதி, நவ.27- மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான யோகாசன போட்டியில் புதுக்கோட்டை பொன்னமராவதி ஒன்றியம் ரகுநாதபட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மாணவர்கள் ஐந்து வயது பிரிவில் ஜீவானந்தம், ஒன்பது வயது பிரிவில் கிருஷ்ண சாரதி, பத்து வயது பிரிவில் ஜெகதீஸ்வரன், 8 வயது பிரிவில் பொன்னமராவதி வளையப்பட்டி பழனியப்பா ஆரம்பப் பள்ளி மாணவர் விஷ்வா முகில் ஆகிய மாணவர்கள் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றனர்.  முதலிடம் பெற்ற மாணவர்கள், யோகா ஆசிரியர் சத்தியமூர்த்தி ஆகியோரை பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலர்கள் ராஜா சந்திரன், பால் டேவிட் ரோசாரியோ ஆகியோர் பாராட்டினர்.