நாகப்பட்டினம், மே 8- நாகை மாவட்டம் நாகூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை, 50 சதப் பணியாளர்களுடன், வியா ழக்கிழமை அன்று அரசின் வழிகாட்டுல் முறைகளின்படி இயங்கத் துவங்கியது. தொழிற்சாலைகளின் நுழைவு வாயில்கள் மற்றும் உட்பகுதிகளில் சானிடைசர், தண்ணீர், சோப்பு வசதியுடன், தொழிலாளர்கள் கைகளைக் கழுவி சுத்தம் செய்த பின்னர், முகக் கவசங்களுடன் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். தொழிற்சாலை முழுவதும் தினமும் இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.