tamilnadu

img

நாகை தொகுதியில் வேளாண்.கல்லூரி அமைய பாடுபடுவேன்

திருவாரூர், ஏப்.8-மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.செல்வராசு “நாகை தொகுதிக்குட்பட்ட கீழ்வேளுரின் வேளாண்மைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதிஅளித்துள்ளார்.மேலும் தொகுதியில் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் குறித்தும் பட்டியலிட்டுள்ளார். அதன்படி, ஹைட்ரோ கார்பன் பெட்ரோலிய மண்டல திட்டங்களை தடுத்து காவிரி டெல்டாவை வேளாண் பாதுகாப்பு சிறப்புமண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவிரியின் குறுக்கே கர்நாடகம் கட்ட உள்ள மேகதாதுஅணை தடுத்து நிறுத்தப்படும். வேளாண்மைக்கென்று தனி நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்திடவும், நாகை துறைமுகத்தை மீண்டும் செயல்படுத்திடவும், தஞ்சாவூர் - நாகூர் இருவழிரயில்பாதையை அமைக்கச்செய்திடவும், உப்பு ஏற்றுமதியை அதிகரிக்க இதன் துணைத் தொழில்களை பெருக்கிட இதற்கான ரயில்போக்குவரத்தை ஏற்படுத்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும். கண்ணாடி இழை படகு கட்டுமான தளம்அமைக்கப்படும்.


தஞ்சை- நாகூர் சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் அனுமதித்தபடி உடன் அமைக்கப் படும். மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தை உரியநிலையில் செயல்படுத்தப் படும். கேந்திர வித்தியாலாயாவில் மேல்நிலை வகுப்புகளை தொடரச் செய்யப் படும். நாகை நாடாளுமன்ற தொகுதியில் வேளாண் பல்கலைக்கழகம் கொண்டு வர படும். வேளாண் சார்ந்த துணைத்தொழில்களைப் பெருக்கப் படும். டெல்டா மாவட்டத்தின் ராயல்டி தொகையை இந்தமாவட்டத்திற்கே பயன்படுத் திட நடவடிக்கை எடுக்கப் படும். நாகை, கீழையூர், கீழ்வேளூர், வேதாரண்யம், தலைஞாயிறு ஆகிய மையங்களில் புயல் பாதுகாப்பு மையம் அமைக்கப் படும். மாவட்டத்தில் நெல் மணி அறுவடைக்கு பின் வைக் கோலைக் கொண்டு கோட்டூரில் பேப்பர் மில் அமைக்கப்படும். நாகை மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி, கீழ் வேளூரில் விவசாய கல்லூரி அமைக்கப்படும். மீன் பதப்படுத்தும் கிடங்கு, இறங்குதளம் அமைவிடம் அமைக்கப்படும். திருத் துறைப்பூண்டி ஒன்றியம் கொக்கலாடியில் கால்நடைமருத்துவமனை அமைக்கப் படும். மத்திய சுற்றுலா மேம்பாட்டு மூலமாக உதய மார்த்தாண்டபுரத்திலுள்ள சரணாலயத்தை மேம்படுத் தப்படும். குடவாசலில் பாரதிதாசன்உறுப்பு கல்லூரிக்கு இடம் ஒதுக்கீடு செய்து கல்லூரிகட்டிடம் கட்டப்படும். நன்னிலம் ஒன்றியம் கொல்லுமாங்குடியில் சர்க்கரை ஆலை அமைத்து கரும்புவிவசாயிகளின் பயன்பாட் டிற்கு கொண்டு வரப்படும். மேலும் வணிகர் சங்கங்கள்,தொழிலாளர் சங்கங்கள், விவசாய சங்கங்களிடம் தொடர்ந்து ஆலோசனை பெற்று மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறியுள்ளார்.


ஏற்கனவே செய்தது 


மேலும் கடந்த காலங்களில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த குறைந்தபட்ச மாதங்களில் வெள்ளம்,வறட்சி, புயலால் பாதிப்பிற் குள்ளாகும் விவசாயப் பயிர்களுக்கு ஈடான உரிய இழப்பீடு வழங்க வகை செய்யாததேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தை மத்திய வேளாண்துறை அமைச்சர் சதுரானந்தமிஸ்ரா (சிபிஐ) அவர்களிடம்வாதாடி காவிரி டெல்டாவிற் கென்று தனி மாதிரி காப்பீடு திட்டத்தை அமல்படுத்திட செய்துள்ளார்.தஞ்சாவூர்- நாகூர் அகல ரயில்பாதை அமைத்திட போதுமான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யாத போதுதனி ஆளாக நாடாளுமன்ற கூட்டத்தில் ஒரு நாள் முழுவதும் வாதாடி வர்த்தக சங்கம்மற்றும் மக்களைத் திரட்டி இதற்காக தொடர்ந்து போராடி கொண்டு வந்துள் ளார். காவிரி நடுவர் மன்றம்அமைத்திட நாடாளுமன்றகூட்டத்தில் முன்மொழியப் பட்ட தீர்மானத்தை தமிழகநாடாளுமன்ற உறுப்பினர் களில் இவர் ஒருவர் மட்டுமே ஆதரித்து வாக்களித்து நடுவர் மன்றம் அமைக்கச் செய்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத போதும் மக்களுக்காக மக்களோடு இருந்துஇவர்களின் வாழ்க்கை தேவைக்காக, பாதுகாப்பிற் காக தொடர்ந்து போராடி வருகிறார்.


;