tamilnadu

img

புயல் பாதித்த மக்களுக்கு ஆறுதல் கூற வராத மோடி ஓட்டுக்காக 4 முறை தமிழகம் வந்துள்ளார்

தஞ்சாவூர், ஏப்.9-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வேதாந்தம் திடலில், ஜனநாயகமுற்போக்குக் கூட்டணி சார்பில் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்தை ஆதரித்து தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக பேராவூரணி ஒன்றிய பொறுப் பாளர் க.அன்பழகன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் தனம் கோ.நீலகண்டன் வரவேற்றார். சேதுபாவாசத்திரம் வடக்கு திமுக ஒன்றியசெயலாளர் மு.கி.முத்து மாணிக்கம்,தெற்கு ஒன்றியச் செயலாளர் வை.ரவிச்சந்திரன், முன்னாள் பேரூராட்சிதலைவர் என்.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், “மக்கள், நீங்கள் வாக்களிக்கும்போது, உங்களுக்கு உதவியவர்கள்யார்? சிரமப்பட்ட போது உங்களோடு கூட உறுதுணையாக நின்றவர்கள் யார் என சிந்தித்து வாக்களியுங்கள். உங்களுக்கு தனி மரியாதை தரக் கூடிய வாக்குச்சீட்டு உங்கள் கையில் உள்ளது. விலைக்கு விற்பதற்கல்ல வாக்குச்சீட்டு என்பதை வாக்காளர்கள் உணர வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை தந்து பொதுமக்களை ஏமாற்றிய மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும். பாஜகவை விமர்சித்த அதிமுகவின் தம்பிதுரையும், அன்வர் ராஜாவும், இன்றைக்கு மாநிலத்தில் 8 ஆண்டு காலம் மக்கள் விரோத ஆட்சி நடத்துபவர்களும் பல்லக்கில் ஏற்றி பவனி வருகிறார்கள். மீண்டும் அவர்கள் தான் வர வேண்டும் என்கிறார்கள். இது சந்தர்ப்பவாதம் அல்லவா? 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத்முதல்வராக இருந்த நரேந்திர மோடிநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது, அளித்த வாக்குறுதி வேலை இல்லாத் திண்டாட்டத்தை போக்குவேன். ஆண்டுக்கு 2 கோடிஇளைஞர்களுக்கு வேலை தருவேன்என்று. இப்போதுள்ள புள்ளிவிபரம் சொல்கிறது 6 கோடி பேர் வேலை இல்லாமல் உள்ளனர். ஒன்றரைக் கோடி பேர் இருந்த வேலையையும் இழந்துள்ளனர். 


கஜா புயலால் இப்பகுதி மக்கள்வீடுகளை, தென்னந் தோப்புகளை, படகுகளை இழந்து கதியற்று, கண்ணீர் வடித்த போது எட்டிப் பார்க்காத,ஆறுதல் கூறாத பிரதமர் மோடி, இப்போது வாக்குகளுக்காக 4 முறைதமிழகம் வந்துள்ளார். அன்றைக்கு நாட்டு மக்களுக்காக வர முடியாதவர் இன்று ஓட்டுக்காக ஓடி வருகிறார். ஆதாயத்துக்காக உங்களை தேடி வருபவர் உங்களுக்கு தேவையா? உங்களோடு சுகதுக்கங்களில் பங்குபெறும் நாங்கள் தேவையா? ஓராண்டு காலம் தில்லி பனியிலும், வெயிலிலும், குளிரிலும் விவசாயிகள் கடன் தள்ளுபடிக்காக போராடிய போது கண்டு கொள்ளாதபிரதமர். இப்போது விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரூ.6 ஆயிரம்தருவேன் என்பது வாக்குகளுக்காக அல்லவா? விவசாயிகள் உங்களை நம்பத் தயாராக இல்லை. 5 ஆண்டு கால நாடாளுமன்றக் கூட்டத்தில் வெறும் 19 நாட்களுக்கு மட்டுமே வந்தவர் தான் பிரதமர் மோடி. கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், ஜனநாயக வாதிகள், ஏன் அவரது கட்சியைச் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட பலர் இன்றைக்கு எச்சரித்துள்ளனர். மீண்டும் பிரதமர் மோடி வந்தால் நாடாளுமன்ற ஜனநாயகம் செத்துவிடும் என்று. இவ் வாறு அவர் பேசினார். 


திமுக நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன், பழஞ்சூர் செல்வம், என்.செல்வராஜ், சுப.சேகர், ராஜரெத்தினம், ஆரோ அருள், முகமது பாரூக், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சிங்காரம்,கே.வி.கிருஷ்ணன், சேக் இப்ராகிம்ஷா, நடராஜன், குருவிக்கரம்பை சம்பத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிராசமாணிக்கம், சித்திரவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏ.வி.குமாரசாமி, ஆர்.எஸ்.வேலுச்சாமி, மதிமுக நிர்வாகிகள் மாவட்டச்செயலாளர் உதயகுமார், பாலசுப்பிரமணியன், குறிச்சி மணிவாசகம், குமார்,திராவிடர் கழக நிர்வாகி வை.சிதம் பரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிமுஸ்லிம் லீக், மனித நேய ஜனநாயககட்சி அப்துல் சலாம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

;