திருச்சிராப்பள்ளி, ஜன.16- இந்திய சமூக விஞ்ஞான கழகம் திரு வெள்ளறை கிளை சார்பில் குடி யுரிமை திருத்தச்சட்டம் என்ன சொல்கி றது என்ற தலைப்பில் சிறப்பு கருத்த ரங்கம் திருவெள்ளறையில் நடை பெற்றது. கருத்தரங்கிற்கு முருகேசன் தலைமை வகித்தார். பொதுகாப்பீட்டு கழக ஊழியர் சங்க தென்மண்டல செய லாளர் ஆனந்தன், சமூக விஞ்ஞான கழக ராமலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற் றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர், மாணவர்கள், சிறுபான்மையினர், வெகுஜன அமைப்பினர் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆனைமுத்து நன்றி கூறினார்.