tamilnadu

img

குடிநீர் பிரச்சனையை தீர்க்கமாட்டீர்கள்; ஓட்டு கேட்க மட்டும் வருவீர்களா? வாக்குசேகரிக்க வந்த அதிமுக தம்பிதுரையை முற்றுகையிட்டு திருப்பியனுப்பிய கிராம மக்கள்

திண்டுக்கல், ஏப்.8-

குடிநீர் பிரச்சனையை தீர்க்கமாட்டீர்கள்; ஓட்டு கேட்க மட்டும் வருவீர்கள் என்று கேள்விஎழுப்பி, வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர்தம்பிதுரையை லந்தக்கோட்டை கிராம மக்கள்முற்றுகையிட்டு திருப்பியனுப்பினர். கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுகவேட்பாளர் தம்பிதுரை மீண்டும் போட்டியிடுகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரூர்நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது லந்தக்கோட்டை கிராமம். இந்த கிராம மக்கள் கடுமையாக குடிநீர் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக கடும் கோபத்தில் இருந்து வந்தனர். பல முறை குடிநீருக்காக புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை, வேடசந்தூர் தொகுதி அதிமுக சட்டமன்றஉறுப்பினர் பரமசிவம் ஆகியோர் திங்களன்று வாக்கு சேகரிக்க லந்தக்கோட்டை கிராமத்திற்குவருவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்துலந்தக்கோட்டை கிராம மக்கள் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 3 மாதங்களாக தண்ணீர் கலங்கலாகவருகிறது. தண்ணீரை குடிக்க முடியவில்லை. பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனத்தில் சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம். மூதாட்டிகள் எப்படி தண்ணீரின்றி வாழ்வார்கள். கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா? இல்லையா? சாக்கடையை விட மோசமாக துர்நாற்றம் வீசுகிறது இந்த தண்ணீர். ஓட்டு கேட்க மட்டும் கூட்டம் சேர்த்துக்கொண்டு ஒரு நாளைக்கு 4 முறை வருகிறீர்களே. மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால்,கேட்க வேண்டாமா? என்றுகொந்தளிப்பு கேள்விகளை எழுப்பி கிராமமக்கள் தம்பிதுரை வாகனத்தை முற்றுகையிட்டுபோராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக பிரமுகர்கள்பலர் பெண்களை மிரட்டினர். ஆனால் கிராம மக்கள் அவர்களை விரட்டினர்.


மக்கள் கேள்விகளால் திணறிய தம்பிதுரை

அப்போது கீழே இறங்கி வந்த வேட்பாளர்தம்பிதுரையிடம் கிராம பெண்கள் கலங்கலான தண்ணீரை குடித்துப் பார்க்குமாறு கூறினர். இதனை பலர் செல்போனில் படம் எடுத்தனர். படம் எடுக்கக்கூடாது என்று தம்பிதுரை பறிக்கச் சென்றார். ஏன் படம் எடுக்கக்கூடாது என்றுகேட்டு சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தண்ணீர் கொடுக்காமல் கிராம மக்களை கொன்றுவிடுவீர்கள் போல இருக்கிறது. யாரும்ஓட்டு கேட்டு வரவேண்டாம் என்று போராட்டத்தில்ஈடுபட்ட மக்கள் எழுப்பிய கேள்விகளால் திணறியதம்பிதுரை பேச முடியாமல், வாகனத்தில் ஏறி,மைக்கில் பேசினார். இந்த பகுதியில் தண்ணீர் பிரச்சனையை சொல்லியிருக்கிறீர்கள் என்று பேச தொடங்கினார். நாங்கள் உங்களிடம் தண்ணீர் பிரச்சனையை சொல்ல வரவில்லை. போராட்டம் செய்கிறோம் என்றனர். ஏற்கனவே கூட்டி வந்து தண்ணீர் பிரச்சனை சொன்னீங்க. ரோடு விவகாரம் சொன்னீங்க என்றார். ஆனால் தீர்த்துவைத்திருக்கிறீர்களா? என்று மக்கள் அவரை நோக்கி கேள்வி எழுப்பினர்.


பரமசிவம் எம்எல்ஏ சமாளிப்பு

காவிரி தண்ணீர் விநியோகத்தை தடை செய்து, இந்த குழாய்களை சோதனை செய்யும்வரை யாரும் இந்த தண்ணீரை குடிக்க வேண்டாம். டேங்கர் தண்ணீரை குடியுங்கள். 2நாளில் சரி செய்வோம். உதவி செய்ய எண்ணம்இருக்கிறது. கேட்பதற்கு உங்களுக்கு உரிமையிருக்கிறது. நீங்க எவ்வளவு வேண்டுமானாலும் கோபப்படலாம். யாரும் கோபப்பட வேண்டாம். இந்த தண்ணீரை பார்க்கும் போதுமனசு வலிக்குது. தேர்தல் நடத்தை விதிகளிலிருந்து விலக்கு பெற்று தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வோம். ஆட்சியரிடம் இன்றுமாலையே பேசுவோம். போர் போட்டுத்தர ஏற்பாடு செய்வோம். வண்டியை அனுப்பிவிடுகிறேன். இளைஞர்கள் இருந்து கவனித்துக்கொள்ளுங்கள். கவலைப்படாதீர்கள். உங்களுக்கு திருப்தியாக இருந்தால் இந்த எலக்சனுக்கு நல்லா செய்யுங்கள். இல்லை என்றால் வேண்டாம். நன்றி என்று பரமசிவம் எம்எல்ஏ சமாளித்தார். ஆனாலும் மக்கள் சமாதானம் அடையாமல் கொந்தளித்தவாறு இருந்தனர். இந்நிலையில் தம்பிதுரையும் முடிந்தால் ஓட்டுப்போடுங்கள் இல்லை என்றால் ஆளை விடுங்கள்என்பது போல் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.லந்தக்கோட்டை பகுதி சம்பவம் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (நநி)