கடலூர், அக். 3- கடலூர் ஆட்சியர் அலு வலகத்தில் திங்களன்று (அக். 3) மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனு வாக அதிகாரிகளிடம் வழங்கி னர். இதில் அண்ணாகிராமம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சன்னியாசிபேட்டை ஊராட்சியை சேர்ந்த பொது மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள அய்யனார் கோவில் அருகே குளக்கரை நீர்நிலை புறம்போக்கில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 22 குடும்பங்கள் வசித்து வருகிறோம். குடிநீர், வீட்டு வரி செலுத்தி வருகிறோம். மேலும் ஆதார் கார்டு, ரேசன் கார்டு, மின்சார இணைப்பும் பெற்றுள்ளோம். இந்நிலையில் நீதி மன்ற உத்தரவுப்படி குளக்கரைக்கு அருகில் வசிக்கும் எங்களை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அளித்துள்ளனர். இந்த இடத்தை விட்டால் வாழ்வாதாரத்திற்கு வேறு இடம் இல்லை. எனவே எங்களுக்கு மாற்று இடம் வழங்கி விட்டு அதன் பிறகு காலி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.