அரியலூர், ஆக.18- அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே பாளை யக்குடி கிராமம் கீழத்தெரு வில் கடந்த 1 மாதங்களாக தண்ணீர் வராததால் அப் பகுதி மக்கள் பெரும் அவ திக்குள்ளாகியுள்ளனர். மேலும் கடந்த 15 ஆண்டு களாக கீழத்தெருவில் இயங்கி வந்த 2 மினி டேங்கும் கடந்த ஒரு வருடங்களாக இயங்க வில்லை. மேலும் இரவு நேரங்களில் கீழத்தெருவில் உள்ள மின் விளக்கும் எரிய வில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட் டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம டைந்த பாளையக்குடி கீழத் தெரு மக்கள் காலி குடங்களு டன் சாலை மறியலில் ஈடு பட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடை நடவடிக்கை எடுப்ப தாக தெரிவித்ததன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.