tamilnadu

img

அரூர் அருகே ரூ.3.47 கோடி பறிமுதல்

தருமபுரி, ஏப்.4-

அரூர் அருகே அரசுப் பேருந்தில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 3.47 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அரூர்-திருவண்ணாமலை சாலையில் தேர்தல் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த உதவி செயற்பொறியாளர் பி.கே. சண்முகம், சிறப்பு காவல்உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் அடங்கிய குழுவினர் பையர்நாய்க்கன்பட்டி கூட்டுச் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழித்தடத்தில் திருவண்ணாமலையில் இருந்து தருமபுரி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை சோதனை செய்ததில், பேருந்தின் சீட்டுகளுக்கு கீழ்பகுதியில் 7 கைப்பைகளில் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.பயணிகளிடம் விசாரித்தபோது, யாரும் இந்தப் பணத்துக்கு உரிமைக் கொண்டாடவில்லை. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.3 கோடியே 47 லட்சத்து 51 ஆயிரத்தை அரூர் சட்டப் பேரவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜி.புண்ணியக்கோட்டியிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். பின்னர் அப்பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.இதனையடுத்து பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநர் பன்னீர், நடத்துனர் ராமு ஆகியோரிடம் பறக்கும் படை அதிகாரிகள் விசாணை நடத்தி வருகின்றனர்

;