tamilnadu

img

வேலையின்மை, பசியால் சொந்த ஊரை விட்டு கிளம்பும் தொழிலாளர்கள்.... என்னவானது பாஜக அரசின் ரூ.50 ஆயிரம் கோடி திட்டம்?

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தப்பிக்கவும் இதனால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் நாட்டின் பெரு நகரங்களில் பணியாற்றிய பீகார், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் தாங்கள் பணியாற்றிய இடங்களுக்கே திரும்பத் தொடங்கியுள்ளனர். வேலையின்மையும், பசியும்அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது.பீகார், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த  தொழிலாளர்கள் சென்னை, புது தில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்பட பல்வேறு நகர்களுக்கும்  திரும்பத் தொடங்கியுள்ளனர்.புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரூ. 50ஆயிரம் கோடி (கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான்) திட்டமொன்றைக் கடந்த ஜூன் மாதத்தில் மத்திய அரசு அறிவித்தது. பல மாநிலங்கள்சொந்த மாநிலத்திலேயே தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதாக உறுதியளித்தன.

பொய்த்துப்போன  பீகார் முதல்வரின் வாக்குறுதி
பிற மாநிலங்களுக்குப் பிழைக்கச் சென்றுதிரும்பிவந்துள்ள 20 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கும் தன்னுடைய அரசுவேலைகளை உருவாக்கித் தரும் என்றும் நிர்ப்பந்தமாக யாரும் திரும்பிப் போக வேண்டிய கட்டாயமில்லை என்றும் பீகார் மாநில முதல்வர்நிதிஷ் குமார் உறுதியளித்திருந்தார். ஆனால் வேலைக்காக அவர்கள் காத்திருந்தது தான் மிச்சம். அவர்களுக்கு அங்கு வேலை கிடைத்தபாடில்லை.எனவே, விமான சேவைகளும் சிறப்பு ரயில்சேவைகளும் தொடங்கியுள்ள நிலையில் பீகார்,ஒடிசா மாநிலங்களிலிருந்து  அவர்கள் வெளிமாநிலங்களுக்கு புறப்படத் தொடங்கியுள்ளனர்.கொரோனா காலத்தில் எவ்விதத்திலும் உதவிசெய்யாமல் கைவிட்ட தொழில் -  தொழிற்சாலைஉரிமையாளர்கள்கூட இப்போது தங்கள் வேலைக்குத் தக்க தொழிலாளர்கள் கிடைக்காததால், அவர்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து தங்கள் பணியிடங்களுக்கு அழைத்து வரத் தொடங்கியுள்ளனர்.தில்லியைச் சேர்ந்த காளான் வளர்ப்பாளர் பப்பன் சிங், தம்மிடம் வேலை செய்த பத்து பீகார்மாநிலத் தொழிலாளர்களை ஒரு லட்சம் ரூபாய்க்குடிக்கெட் எடுத்துக்கொடுத்து விமானத்தில் திரும்பி வரவழைத்துள்ளார். தொழிலாளர்கள் இல்லாமல் தன்னுடைய தொழில் மிகவும் திணறிப் போய்விட்டதாகக் கூறுகிறார் பப்பன் சிங்.

பாட்னாவிலுள்ள ஜெயப்பிரகாஷ் நாராயணன் விமான நிலைய இயக்குநர் பூபேஷ் நேஹிகூறுகையில், “பிகாரிலிருந்து மும்பை, தில்லி, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.  விமானங்களில் பயணம் செய்பவர்களில் எண்பது சதவீதத்தினர் புலம்பெயர் தொழிலாளர்கள்” என்றார். ஆமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு போன்ற நகரங்களுக்குச் செல்லும் சிறப்பு ரயில்களில் இரு மடங்கு பயணிகள் செல்கின்றனர். இந்தத் தொழிலாளர்களில் பலர் சில மாதங்களுக்கு முன் விரக்தியால், நடந்தும் சைக்கிள்களிலும் லாரிகளிலும் கிடைத்த வாகனங்களைப் பிடித்தும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினார்கள். 

ஒடிசாவில் மட்டும் 7 லட்சம்பேர்
ஒடிசாவில் மட்டும் ஏழு லட்சத்துக்கும் அதிக மான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்தஊர்களுக்குத் திரும்பிவந்தனர். வேலையில்லாதிண்டாட்டம் காரணமாக இவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாடு, குஜராத், ஆந்திரம் போன்றதங்களின் பழைய பணியிடங்கள் இருக்கும் மாநிலங்களுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தொழிலாளர்களை தங்கள் பணியிடங்களுக்கு மீண்டும் அழைத்துவர சில முதலாளிகள் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடுசெய்துள்ளனர்.
சூரத்தை தளமாகக் கொண்ட ஒடிசா தொழிலதிபர் ஹரிஹர் பால் கூறுகையில், “புலம்பெயர்ந்ததொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களில் வேலை கிடைக்காததால் நகரங்களுக்குத் திரும்பி வருகின்றனர்” என்றார்.

இ - பாஸ் பிரச்சனை
தமிழகத்திலிருந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் மீண்டும் தமிழகம் வர விரும்புகின்றனர். இ-பாஸ் பிரச்சனை அவர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருவார்கள். இவர்கள் பெரும்பாலும் கட்டுமானப்பணி, திருப்பூர் பின்னலாடை தொழில்களில் ஈடுபட்டவர்கள் ஆவர்.கொரோனா முடக்கத்தால் சொந்த மாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்களுக்கு அங்குஎதிர்பார்த்தது கிடைக்கவில்லை. வேலை
யின்மையும், பசியும் அவர்களை விரட்டிக்கொண்டிருககிறது. வேறுவழியின்றி அவர்கள் மீண்டும் பழைய வாழ்விடங்களை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்.

ஆதாரம்: இந்தியா டுடே இணையதள தகவல்கள்
 

;