தஞ்சாவூர்- திருச்சி வழித்தடத்தில் மின்சார ரயில் கோரி ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், ஜூலை 29-தஞ்சாவூர்- திருச்சி வழித்தடத்தில் காலதாமதமின்றி உடனடியாக மின்சார ரயில் சேவையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ரயில் பயணிகள் உப யோகிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் துணைத் தலைவர் டி.கண்ணன் தலைமை வகித்தார். செய லாளர் வழக்கறிஞர் வெ.ஜீவகுமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தஞ்சை- திருச்சி இடையே மின் பாதை அமைக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. அப்போது ஒரு மாத காலத்திற்குள் ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் இதுவரை ரயில் இயக்கப்படவில்லை. உடனடியாக இந்த வழித்தடத்தில் மின்சார ரயிலை இயக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ரயில் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக் கங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நகரத் தலைவர் எஸ்.வாசுதேவன், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மாரிமுத்து, தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நலப் பேரவை செய லாளர் பாலகிருஷ்ணன், வழக்கறிஞர் உமர் முக்தார், வர்த்தக சங்கம் காஜாமைதீன், செங்கழுநீர் அமைப்பாளர் ரவிச்சந்தி ரன், சரவணன், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தெருமுனைக் கூட்டம்
குடவாசல், ஜூலை 29-திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பெரியார் சிலை, அண்ணா சிலை, ரயில் நிலையம் ஆகிய இடங்களில் சிபிஎம் கட்சி சார்பாக தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சோம. ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் புதிய கல்விக் கொள்கையில் உள்ள ஆபத்துகளை விளக்கி பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் கே.கைலாசம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி.பூசாந்திரம், அண்ணாதுரை, நகர செய லாளர் சி.டி.ஜோசப், மாதர் சங்க மாவட்ட தலைவர் ஆர். சுமதி, பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.இரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் வாயிலாக பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டது. இதே போல் கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் நங்கவரம் மற்றும் நெய்தலூர்காலனி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்திற்கு சங்கரநாராயணன் தலைமை வகித்தார். நெய்தலூர் காலனியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் காலனி கிளை செயலாளர் கணேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு ராஜு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் ஒன்றிய செயலாளர் மூக.சிவா, பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு ஆட்டோ ஊழியர் சங்கம் சார்பாக நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் கட்சியின் மண்ணச்ச நல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன் மற்றும் ஆட்டோ ஊழியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குளித்தலை அருகே 2 பேர் படுகொலை
குளித்தலை, ஜூலை 29-கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ளது முதலைப் பட்டி கிராமம். இங்கு அரசுக்கு சொந்தமான குளம் உள்ளது. இது பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் பல ஆண்டுகளாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குளம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்பு களை அகற்ற கோரி அப்பகுதியை சேர்ந்த ராமர்(60), அவரது மகன் வாண்டு(40) ஆகியோர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இதில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் திங்கள் காலை 7.30 மணியளவில் ராமர் அவ ரது வீட்டில் இருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். அதன்பின் அவரது மகனை அந்த கும்பல் தேடியது. இதில் அருகில் உள்ள கீழமேடு என்ற இடத்தில் உள்ள வாட்டர் டேங்க் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த வாண்டுவை யும் மறித்த அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் அவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. தகவல் அறிந்த குளித்தலை காவல்துறையினர் அங்கு வந்து உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர்.
ஆவின் பால் பாக்கெட் விற்பனையில் முறைகேடு
சீர்காழி, ஜூலை 29-நாகை மாவட்டம் சீர்காழியில் அரசு நிறுவனமான ஆவின் பால் பாக்கெட் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு முறைகேடு நடக்கிறது. கால் லிட்டர்(250 மிலி) பால் பாக்கெட் அதிகபட்ச சில்லறை விலை கார்டு ரூ10.00 எனவும், அதிகபட்ச சில்லறை விலை ரொக்கம் 10.25 எனவும் பாக்கெட்டில் பிரிண்ட் செய்யப்பட்டு உள்ளது. 25 பைசா, 10 பைசா தற்போது புழக்கத்தில் இல்லை. செல்லாத நாணயங்களாக அவை அறிவிக்கப்பட்டு விட்டன. இதனால் ரூ10.25 பாக்கெட் ரூ11க்கு விற்பனை செய்யப்படு கிறது. 75 பைசா ஒவ்வொரு பாக்கெட்டிற்கும் கூடுதலாக வசூ லிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆவின் பால் பாக்கெட்டை விற்பனை செய்யும் தனியார் ஏஜென்சிக்கு அதிக லாபம் கிடைக்கிறது. கால் லிட்டர் பாக்கெட் விலையை ரூ10 அல்லது ரூ.11 என்று மொத்தமாக விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.