தஞ்சாவூர்: தஞ்சை, திரு வாரூர், நாகை மாவட்டங்க ளைச் சேர்ந்தவர்களுக்கு தலை கவசம் அணிவது பற்றிய குறும்பட விழிப்புணர்வு போட்டி காவல்துறை சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் 20 குறும்படங்கள் பங்கேற்றன. தஞ்சாவூர் ராயல் ரிச்சர்ட் என்பவரின் “விதிமீறல்” என்ற குறும்படம் சிறந்த குறும்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசு 10,000 வழங்கப் பட்டது. தஞ்சை சாய் சதோக் இரண்டாம் பரிசான ரூ 5 ஆயிரத்தையும், மயிலாடுதுறை மதியரசு குழுவினர் மூன்றாம் பரிசாக ரூ 3 ஆயிரத்தையும் பெற்றனர். ஆறுதல் பரிசாக தலா 1000 மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி மாணவர் அருண்பிரசாத் குழுவினருக்கும், திருவாரூர் திரு.வி.க கல்லூரி சுகுமாறன் என்பவருக்கும், கும்பகோணம் கே.எஸ்.கே பொறியியல் கல்லூரி யஷ்வந்த் ராஜ் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.