தஞ்சாவூர் டிச.26- உள்ளாட்சி மன்றத் தேர்தலின் போது மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய தேர்தல் அலுவலரை பணியிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என திமுக எம்பி, எம்எல்ஏ.,க்கள் உள்ளி ட்டோர், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் ம.கோ விந்தராவை நேரில் சந்தித்து உள்ளாட்சி மன்ற தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர் இதுகுறித்து செய்தியா ளர்களிடம் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் சில கோரிக்கைகளை முன்வைத் தோம். அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஊராட்சி ஒன்றி யத்தில் திமுகவினர் தாக்கல் செய்த வேட்புமனுவை தள்ளுபடி செய்த தேர்தல் நடத்தும் அலுவலர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் அந்த பகுதியில் முக்கியமான ஆளுங்கட்சி பிரமுகரின் அதிகார பலத்தால் திமுகவினர் வேட்புமனுவை தள்ளு படி செய்துள்ளார். அந்த அதிகாரி உள்ளாட்சி தேர்தல் பணியில் அங்கு இருந்தால் தேர்தல் முறையாக நடக்காது, எனவே அவரை தேர்தல் பணியி லிருந்து விலக்கி வைக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என கூறி யுள்ளோம். கடந்த முறை உள்ளாட்சித் தேர்தல், கூட்டுறவு சங்க தேர்தல்க ளில் நடைபெற்ற முறைகேடு போல் தற்போது நடைபெறக் கூடாது என எடுத்து கூறியுள்ளோம். அவ்வாறு நடைபெற்றால் அதற்கு அந்த அதிகாரிகள் தான் பொறுப்பாவார் கள். உள்ளாட்சி மன்றத் தேர்தலை அமைதியான முறையில் நடத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையை எடுக்க வேண்டும். பதற்றமான பகுதி களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு களை செய்ய வேண்டும் என கேட்டுள் ளோம். தபால் வாக்குகளை செலுத் தும் தேர்தல் பணியாளர்களுக்கு அதற்கான படிவங்களில் தாங்களே சான்றொப்பம் இடலாம் என கூறப்பட்டுள்ளதை எல்லோருக்கும் தெளிவுப்படுத்திட வேண்டும்” என மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுள்ளோம் என்றார். அப்போது, தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சு.கல்யாண சுந்தரம், தேர்தல் பார்வையாளர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேக ரன் (திருவையாறு), எம்.ராமச் சந்திரன் (ஒரத்தநாடு), சாக்கோட்டை க.அன்பழகன் (கும்பகோணம்), கோவி.செழியன் (திருவிடைமரு தூர்), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சா வூர்) ஆகியோர் உடனிருந்தனர்.