சென்னை: இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, தாராளமாக மனமுவந்து நன்கொடை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவ மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.