tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது ஊரகத் துறை அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்ய கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜன.13- நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக கடலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பணி யாற்றிய ஊரக வளர்ச்சித்துறை அலு வலர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்களைக் கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைக ளை வலியுறுத்தி திங்கள்கிழமை மாநிலம் தழுவிய அளவில், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் அனை வரும் கருப்புப் பட்டை அணிந்து பணி புரிந்தனர். மேலும் வட்டாரத் தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இதில் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர் செல்வேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் கை. கோவிந்தராஜன் கண்டன உரை யாற்றினார். மாவட்ட இணைச் செய லாளர்கள் ராஜசேகரன், ஆண்டனி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  இதே போல் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க ஒன்றியத் தலைவர் கி.சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.வீரமணி முன்னிலை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.மகேஷ் கண்டன உரையாற்றினார். பி.திருப்பதி நன்றி கூறினார். 17 பெண்கள் உள்ளிட்ட 36 பேர் கலந்து கொண்டனர்.

;