tamilnadu

img

மலிங்கா சாதனை...

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்குப் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. பிரதீப் 4 விக்கெட்டுகளையும், மலிங்கா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மலிங்கா உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியோர் பட்டியலில் 5-ஆம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் 71 விக்கெட்டுகளுடன் ஆஸ்திரேலியாவின் மெக்ராத் முதலிடத்திலும், முத்தையா முரளிதரன் (இலங்கை - 68 விக்கெட்டுகள்) இரண்டாமிடத்திலும், வாசிம் அக்ரம் (பாகிஸ்தான் - 55 விக்கெட்டுகள்) மூன்றாமிடத் திலும், சமிந்தா வாஸ் (இலங்கை - 49 விக்கெட்டுகள்) நான்காமிடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.