சேலம், பிப்.20- மரவள்ளிக்கிழங்கு விலை சம் பந்தமாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முத்தரப்பு குழு முடிவு களை அமல்படுத்திட புதிய நடை முறையை உருவாக்க வேண்டு மென கோரிக்கை வைத்தனர். மரவள்ளி கொள்முதலுக்கு உரிய ஆதார விலை மற்றும் மர வள்ளி சாகுபடியில் நிலவும் பிரச்ச னைக்குத் தீர்வு காணும் வகையில், முத்தரப்பு கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்டக்குழு சார்பில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, மரவள்ளி கிழங்கு டன் ஒன்றுக்கு குறைந்தப் பட்ச ஆதார விலையாக ரூ.12 ஆயி ரத்துக்கு மேல் விற்ற காலங்களும் உண்டு. தற்போது ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் தான் கிடைக் கிறது. எனவே தமிழக அரசு ரூ.13 ஆயிரத்துக்கு குறையாமல் இனி கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். வேறு பயன்பாட்டிற் காக இறக்குமதி செய்யப்பட்ட 2 லட்சம் டன் மக்காளச்சோள மாவை ஜவ்வரிசி உற்பத்தியில் கள்ளத் தனமாக கலந்து ஜவ்வரிசி தயா ரித்ததால், மரவள்ளி டன்னுக்கு ரூ.13 ஆயிரம் வரை கிடைக்காமல் கடும்வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. எனவே, ஜவ்வரிசி உற்பத்தியில் இறக்குமதி ஸ்டார்ச் மற்றும் இறக்கு மதி மக்காச்சோளம் மாவு கலப் படம் செய்யாமல் முறையாக தடுத் திடல் வேண்டும். ஏழை, எளிய விவ சாயிகளின் ஒரே பணப் பயிரான மரவள்ளி விவசாயம் அழியாமல் பாதுக்காத்திட இதுபோன்று முத்த ரப்பு கூட்டம் உடனுக்குடன் நடத்தி விவசாயிகளுக்கு அனுகூலமான முடிவு எடுத்து உதவ வேண்டும். மேலும், முத்தரப்பு கூட்டங்கள் ஒரு சடங்காக அமைந்திடாமல், இதில் எடுக்கப்படும் முடிவுகளை அமலாக் கிட ஒரு ‘சிஸ்டம்’ உருவாக்கப்பட வேண்டும். மேலும், கலப்படம் செய்யும் ஆலைகள் மற்றும் கள்ள சந்தையில் ஈடுபடும் ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்திட வேண்டும். உற்பத்தி யாகும் அனைத்து ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச்களும் சேலம் சேகோசர்வ் மூலம் வாணிபம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஜவ் வரிசி, ஸ்டார்ச்மாவு ஆகியவை கள்ள சந்தையில் தங்கு தடையின்றி விற்பனைச் செய்யப்படுகிறது. அவற்றை தடைச்செய்திட உரிய நடவடிக்கை வேண்டும். இத னாலும் மரவள்ளி விலை செயற்கை யாக குறைக்கப்படுகிறது. சேகோசர்வ்வில் எடை போடுதல், விலை நிர்ணயம் செய்தல், மாவுசத்து அறிதல், வெட்டுக்கூலி, லாரியில் லோடு ஏற்றுதல், இறக்குதல் போன்ற வற்றில் வெளிப்படைத்தன்மை வேண்டும். விவசாயிகளிடம் பெறப் படும் மரவள்ளிக்கு ஒவ்வொரு கட்டத்திலும் உரிய ரசீது வழங்க வேண்டும். மரவள்ளி கொள்முதலில் இடைத்தகரர்களும், ஆலை முத லாளிகளும் கூட்டாக சேர்ந்து விவ சாயிகளை ஏமாற்றுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் தெரிவிக் கப்பட்டிருந்தது. முன்னதாக, இம்மனுவினை விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி, பெத்த நாயக்கன்பாளையம் ஒன்றிய செய லாளர் என்.கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் அளித்தனர்.