திங்கள், ஜனவரி 25, 2021

tamilnadu

img

நவ.26 வேலை நிறுத்தத்தில் மாதர் சங்கம் பங்கேற்பு....

சென்னை:
நவம்பர் 26 பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பங்கேற்கிறது.

இதுகுறித்து மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:கொரோனா நோய் பரவல் மற்றும் ஊரடங்கால் வேலை இழப்பு, வருமானம் இழப்பு, உணவு பற்றாக்குறை போன்றவைகளால் மக்கள் பெரும் துயரங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டில் 15 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வறுமையின் பிடியில் சிக்கித்தவிப்பார்கள் என்று உலகவங்கி எச்சரித்துள்ளது. இதில் பெண்களே அதிகம் பாதிப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.  இன்றைய பொருளாதார நிலை முறைசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களின்வேலை வாய்ப்பை பெரிதும் பாதித்துள்ளது.  மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மாறாக பாஜக அரசு அனைத்துத்தரப்பு உழைக்கும் மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. பெண்கள் மற்றும் தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. மக்கள் விரோதக் கொள்கைகளை கடைப்பிடிக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராகமத்திய தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் அறிவித்துள்ள நவம்பர் 26 பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆதரவளிப்பது, பங்கேற்பது எனமுடிவு செய்துள்ளது.  தமிழகம் முழுவதும் பெண்கள் பெருந்திரளாக  பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

;