விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை!
ஜூலையில் கணக்கெடுப்பு
சென்னை, மே 20- கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கு புதிய பயனாளிகளை சேர்க் கும் பணி ஜூலை மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது
முன்னதாக, மகளிர் உரிமை தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பங் கள் இந்த மாத இறுதிக்குள் அச்சிடப் பட்டு குடும்பத் தலைவிகளிடம் வழங் கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக குடும்ப அட்டை பெற்றவர் கள், புதிதாக திருமணமான பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் இந்த முறை மக ளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வழங்கப் படும் என்று தெரிகிறது.
அரசுக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க அவகாசம்
சென்னை, மே 21- தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பத்திற்கான இறுதி நாள் மே 20 என கூறப்பட்டிருந்தது. இதனை நீட்டிக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், விண்ணப்பிப் பதற்கான அவகாசத்தை மே 24 வரை திங்களன்று மாலை தமிழக அரசு நீட்டித்துள்ளது.
ரூ.55 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை
சென்னை, மே 20- ஆபரண தங்கத்தின் விலை கடந்த வார தொடக்கத்தில் குறைந்திருந்த நிலையில், வார இறுதியில் சட்டென்று உயர்ந்தது. கடந்த வெள்ளியன்று தங் கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 54 ஆயி ரத்து 160-க்கு விற்கப்பட்ட நிலையில், சனிக்கிழமையன்று 640 ரூபாய் உயர்ந்து ரூ. 54 ஆயிரத்து 800-ஆக உயர்ந்தது. இந்நிலையில், திங்களன்று (மே 20) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 400 உயர்ந்து, ரூ. 55 ஆயிரத்து 200-ஐ எட்டி யது. சென்னையில் ஆபரணத் தங்கத் தின் (22 கேரட்) முந்தைய நாள் விலை யில் கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6900-ஆகவும் சவரன் ரூ. 55 ஆயிரத்து 200-ஆகவும் இருந்தது. வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ரூ.101-க்கு விற் பனை செய்யப்படுகிறது.
அதிமுகவுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை!
எஸ்.பி.வேலுமணி பேட்டி
கோயம்புத்தூர், மே 20- முன்னாள் அமைச் சர் எஸ்.பி. வேலு மணி, கடந்த சில நாட்க ளாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாட்டில் இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.
குறிப்பாக பாஜகவுடனான கூட்டணி முறிவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் பரப்பப்பட்டன. இந்நிலையில் கோவை விமான நிலையத்திலிருந்து சென் னைக்கு கிளம்பிய எடப்பாடி பழனிசாமி யை, நேரில் சென்று வழியனுப்பி வைத்த எஸ்.பி. வேலுமணி, பின்னர், செய்தியா ளர்களிடம் பேசினார்.
“பல ஊடகங்கள் தவறான செய்தியை பரப்புகின்றன. ஒரு கட்சியை சார்ந்து, தின மும் எங்களை டேமேஜ் பண்ணுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். சிறப் பான முறையில் இபிஎஸ் ஆட்சி நடத்தி னார். தமிழக மக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என நினைக்கின்றனர். அதிமுக எதிர்க்கட்சி யாக ஆன பின்னரும் ஒரு சிலரின் அஜெண்டாவைப் பின்பற்றி, எங்க ளுக்குள் பிளவு என எழுதுகின்றனர். எந்த குழப்பமும் கிடையாது. குழப்பம் செய்த வர்கள் வெளியே போய்விட்டனர். ஒரு பிம்பத்தை உருவாக்கவே பார்க்கின்ற னர். அதிமுக பேரை சொன்னால் பேப்பரை படிப்பார்கள் என்பதற்காக இப்படி எழுது கின்றனர்” என்றார்.
அதேநேரம், ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கத்தை சந்தித்தீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள் விக்கு, எஸ்.பி வேலுமணி பதிலளிக்கா மல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.