tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : இந்திய விடுதலைப் போராட்ட வீரர் கே.முத்தையா நினைவு நாள்...

தஞ்சை மாவட்டம் பேராவூரணி கிராம ஊராட்்சிக்குட்பட்ட முடப்புளிக்காடு உள்ளிட்ட 11 கிராமங்களுக்கு கிராம முன்சீப் ஆக வாழ்ந்த கருப்பையா – வள்ளியம்மை இணையருக்கு முதலாவது குழந்தையாக 1918 ஜனவரி 14 அன்று பிறந்தவர் கே. முத்தையா.

1932 ஆம் ஆண்டில் பெரியார் சோவியத் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் முடித்துப் பட்டுக்கோட்டையில் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு சோசலிசத்தின் பால் ஈடுபாட்டை முத்தையாவிற்கு ஏற்படுத்தியது. அப்போது முதல் சுதந்திர போராட்ட வீரராக துவங்கிய அவரதுஅரசியல் பயணம், மகத்தான கம்யூனிஸ்ட் தலைவராக மாற்றியது.1964 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உதயமானபோதுதன்னை இணைத்துக் கொண்டார்.  கட்சியின் இதழான தீக்கதிர் செய்திஇதழை நடத்துவது என்று முடிவு செய்து பொறுப்பை முத்தையாவிடம்கட்சி  ஒப்படைத்தது. சென்னை நடேசன் சாலையில் வாடகை வீட்டில்ஒத்திக்கு வாங்கிய சிலிண்டர் இயந்திரத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. 1969ல் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமும், “தீக்கதிர்” இதழும்மதுரைக்கு மாற்றப்பட்டது. 1970ல் “செம்மலர்” இலக்கிய மாத இதழ் தொடங்கப்பட்டு அதன் ஆசிரியர் பொறுப்பையும் கட்சி முத்தையாவிடம் ஒப்படைத்தது. 1963 முதல் 1990 வரையிலும் தனது ஆசிரியர் பொறுப்பைத் திறம்பட செய்தார்.

முத்தையா எழுதிய “தமிழிலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம்”எனும் நூல், தமிழ் இலக்கியங்களை மிக ஆழமாக ஆய்வு செய்கிறது.முத்தையாவின் 60 ஆண்டுகால அரசியல் பணியிலும், 50 ஆண்டுகாலஇதழாளர் வாழ்விலும் மிகச்சிறந்த சாதனையாக 1975 ஆம் ஆண்டுஇலக்கியத்தை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுப்பதென இந்தியகம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு எடுத்த முடிவின்அடிப்படையில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என அனைவரையும் இணைத்த ஒரு சங்கத்தை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பை கு. சின்னப்ப பாரதியுடன் இணைந்து ஏற்படுத்தினார். பன்முகத்தன்மையோடு வாழ்ந்த கே. முத்தையா 2003 ஜுன் 10 அன்று நாள் காலமானார்.

பெரணமல்லூர் சேகரன்

;