tamilnadu

img

வேளச்சேரி – செயிண்ட் தாமஸ் மவுண்ட் பறக்கும் ரயில் சேவை டிசம்பரில் தொடக்கம்

வேளச்சேரி – செயிண்ட் தாமஸ் மவுண்ட் பறக்கும் ரயில் சேவை டிசம்பரில் தொடக்கம்

சென்னை, அக்.17- வேளச்சேரி – செயிண்ட் தாமஸ் மவுண்ட் இடையி லான பறக்கும் ரயில்  சேவை திட்டப் பணிகள் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றன. 2008ஆம் ஆண்டு அப்போ தைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் ரூ.495 கோடி மதிப்பில் 5 கிலோமீட்டர் தூர பறக்கும் ரயில் சேவை நீட்டிப்பு திட்டத் திற்கு அடிக்கல் நாட்டப் பட்டது. வேளச்சேரி, மவுண்ட் இடையில் ஆதம் பாக்கம், புழுதிவாக்கம் என இரண்டு ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலம் கையகப்படுத் துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 12 ஆண்டு கள் முடங்கி கிடந்த திட்டத்தை 2020ஆம் ஆண்டு  முடுக்கிவிட்டனர். தற்போ தைய மதிப்பீட்டின்படி இந்த திட்டத்திற்கு ரூ.730 கோடி செலவாகும். கடந்த ஆண்டு ஆதம்பாக்கம் – செயிண்ட் தாமஸ் மவுண்ட் ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்வட்டச் சாலையில் கிர்டர் சரிந்து  விழுந்து விபத்து ஏற்பட்ட தால் பணிகள் மேலும் தாம தமானது. தெற்கு ரயில்வே மூத்த அதிகாரி தெரிவிக்கையில், ரயில் வழித்தட இணைப்பு பணிகள் அனைத்தும் முடி வடைந்து விட்டதாகவும், தண்டவாள அழுத்தத்தை சரி செய்யும் பொறியியல் பணி கள் நடந்து வருவதாகவும் கூறினார். மெஷின் பேக்கிங்,  லோடு டிஃப்லக்ஷன் ஆகிய பரிசோதனைகள் நடை பெறுகின்றன. உயர்மட்ட மேல்வழித்தட மின் கம்பிகள் கட்டமைக்கும் பணிகள் அடுத்த மாதம் முடிவடை யும். வரும் டிசம்பர் மாதம் வேளச்சேரி – செயிண்ட் தாமஸ் மவுண்ட் பறக்கும் ரயில் சேவை பயன்பாட்டி ற்கு வரும் என்று அவர் தெரி வித்தார். இந்த சேவை பள்ளிக் கரணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சென்னையின் பிற பகுதி களுக்கு விரைவாக பய ணிக்க உதவும். செயிண்ட் தாமஸ் மவுண்ட் ரயில் நிலை யம் மல்டி மோடல் ஹப் ஆக  மாறும். புறநகர் ரயில், மெட்ரோ ரயில், சென்னை பெருந்திரள் விரைவு  ரயில், மாநகர பேருந்து சேவை ஆகிய பொதுப் போக்கு வரத்து வசதிகள் இங்கு கிடைக்கும்.