tamilnadu

img

நிரம்பி வரும் வீடூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நிரம்பி வரும் வீடூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

விழுப்புரம், அக்,19- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள  வீடூர் அணையின் நீர்மட்டம் 29 கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், கரையோர மக்க ளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. விக்கிரவாண்டி அருகே திண்டிவனம் வட்டத்தில் வீடூர் அணை அமைந்துள்ளது. சங்கராபரணி ஆறு மற்றும் பெரியாறு (தொண்டி) சங்கமிக்கும் இடத்தில் இந்த அணை அமைந்துள்ளது. இந்த அணை  15,800 அடி நீளமும், 37 அடி உயரமும் கொண்டுள்ளது. நீர்மட்டம் 32 அடியாகும். இந்த ஆணையில் இருந்து வெளி யேறும் நீரால் விக்கிரவாண்டி, மயிலம், வானூர், புதுச்சேரி உள்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 3,200 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த இரண்டு நாட்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், விழுப்புரத்தில் உள்ள நீர் நிலைகள் வேக மாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில் வீடூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதி கரித்து வருகிறது. ஞாயிறன்று காலை நில வரப்படி அணையின் நீர்மட்டம் 28 கன அடி யாக இருந்த நிலையில் மதியம் 29 கன அடி யாக உயர்ந்தது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “தற்போது வீடுர் அணையின் நீர்மட்டம் 29 கன அடியாக உள்ளது. சனிக்கிழமைஅணையின் நீர்மட்டம் 28 கன அடியை தொட்டது. அப்போது சங்கரா பரணி காரையோரம் வசிக்கும் கிராம மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் ஆற்றில் இறங்குவது, மீன் பிடிப்பது, செல்பி  எடுப்பது போன்ற எந்தவிதமான செயல் களிலும் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம். பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை 1077, 1070, 112 எண்களில் தொடர்பு கொள்ளவும். மேலும், 94889 81070 எண்ணிற்கு, வாட்ஸ் ஆப் மூலமாகவும் தெரிவிக்கலாம். அணை 30 கன அடிக்கு வரும்போது இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்படும். தற்போது அணையின் கதவுகள் ஏதும் திறக்கப்படவில்லை நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.