சென்னை மாநகராட்சி சார்பில் மணலி பகுதியைச் சேர்ந்த 20 சாலையோர சிறுகடை உணவு விற்பனையாளர்களுக்கு ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள தள்ளுவண்டிகளை நகர விற்பனைக்குழு உறுப்பினர் கே.பலராமன் தலைமையில் மண்டலக் குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.வெங்கட் ஆகியோர் வழங்கினர். இதில் செயற் பொறியாளர் கே.தேவேந்திரன், மாமன்ற உறுப்பினர் டி.ராஜேந்திரன், சிபிஎம் மணலி பகுதி குழு உறுப்பினர் ஏ.அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.