tamilnadu

img

மூத்த தோழர் துணைவியார் மறைவு கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி

 மூத்த தோழர் துணைவியார் மறைவு  கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி

கடலூர், ஆக. 11- சிபிஎம் மூத்த தோழர், ஓய்வுபெற்ற அரசு கால்நடை ஆய்வாளர், மாநகராட்சித் தொழி லாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர், அகில பாரத மூத்த குடிமக்கள் சங்கத்தின் தலைவர், அனைத்துக் குடியிருப்போர் சங்க நிர்வாகியுமான சசி (எ) ச.சிவ ராமனி மனைவியும், ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநர் எஸ்.பிறையோனின் தாயார் சி.சவுந்திரம் ஞாயிற்றுக்கிழமை கால மானார். அவரது இறுதி ஊர்வலம் திங்கட்கிழமை (ஆக.11) கடலூர் செல்ல குப்பம் குறிஞ்சி நகரில் அமைந்துள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டது. பிறகு, செல்லங்குப்பம் இடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது. சவுந்திரத்தின் உடலுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன், ஜே.ராஜேஷ் கண்ணன், ஆர்.அமர்நாத், போக்குவரத்துச் சங்க துணைத் தலைவர் ஜி.பாஸ்கரன், கைத்தறிச் சங்கம் மாவட்டச் செயலாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, எழுத்தாளர் சங்க மாவட்டச் செயலாளர் பால்கி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ஆள வந்தார், அனைத்துக் குடியிருப்போர் நலசங்கங்களின் சிறப்புத் தலைவர் எம்.மருதவாணன், தலைவர் பாலு.பச்சையப்பன், பொதுச்செயலாளர் பி.வெங்கடேசன், பொருளாளர் பி.கே.வி.ரமணி, ஓய்வு பெற்றோர் சங்கத் தலை வர் டி.புருஷோத்தமன், என்.காசிநாதன், அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் கூட்ட மைப்பு மாவட்டத் தலை வர்கள் மற்றும் ரோட்டரி சங்கம் லயன்ஸ் சங்கத்தின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.