போக்குவரத்து ஊழியர்கள் தர்ணா போராட்டம்
திருவண்ணாமலை, ஜூலை 22 - அரசு போக்குவரத்து கழகத்தில் பணி யில் இருப்போர், ஓய்வு பெற்றோர் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, திண்டுக்கல்லில் நடைபெற்ற ஓய்வூதியர் கோரிக்கை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, திருவண்ணாமலை சிட்கோ பணிமனை முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு இணைந்து நடத்திய இந்த போராட்டத்திற்கு ஏ. சேகர் தலைமை தாங்கி னார். சிஐடியு நிர்வாகிகள் இரா.பாரி, எம். வீரபத்திரன், கஜேந்திரன், தங்கமணி, கமலக்கண்ணன், போக்குவரத்து கழக நிர்வாகிகள் வடிவேல், நாகராஜன், முரளி, ஏழுமலை, நாராயணன், பாலதண்டாயுதம், சுதர்சனம், தமிழழகன், தாமோதரன், பார்த்தி பன், மணி, பாலாஜி, பிரபாகரன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.