tamilnadu

img

போக்குவரத்துத் தொழிலாளர் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் எழுப்பிய சின்னத்துரை எம்எல்ஏ

தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம். சின்னதுரை, அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி, தமிழக அரசின் கவனத்தை ஈர்த்தார். அப்போது, சின்னத்துரை எம்எல்ஏ எழுப்பிய கேள்விகளுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலளித்தார். 
அதன் விவரம் வருமாறு:

தொழிலாளர்களைப் பாகுபடுத்தும் 
ஒப்பந்த தொழிலாளர் முறை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை  மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம். சின்னதுரை, “போக்குவரத்துத் துறையில் 25 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்நிலையில், அவுட்சோர்சிங் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர்களை நியமனம் செய்யக் கூடாது; சமூக நீதி,  இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்ப வேண்டும். ஒப்பந்த  தொழிலாளர் முறை தொழிலாளர்களை பாகுபடுத்தும் மோசமான முறை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது. எனவே, ஒப்பந்த முறையைக் கைவிட்டு நிரந்தர அடிப்படையில் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ஒப்பந்த ஊழியர் நியமனம் தற்காலிகமே!

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.  சிவசங்கர், “இதே கருத்து குறித்து நாகை மாலி எம்எல்ஏ கவன ஈர்ப்புத் தீர்மானமும் கொடுத்திருக்கிறார். ஆகவே, இந்தப் பிரச்சனைக்கு விளக்கம் அளிக்க வேண்டியது  எனது கடமையாகும். அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்பவில்லை. இதன்  விளைவு ஓய்வு பெறும் பொழுது புதிதாக ஒருவரை உட னடியாக பணியில் அமர்த்த முடியவில்லை. அந்த இடம்  காலிப் பணியிடமாக இருந்து வருகிறது. 

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. குறிப்பாக விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 685  பேரை நியமனம் செய்ய அரசாணையும் வெளியிடப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. 

தற்போது உள்ள நிலைமைகளை சமாளிக்க ஒப்பந்த  ஊழியர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது நிரந்தரமான ஏற்பாடு அல்ல. தற்காலிகமானது தான்.  நிரந்தரமாக வேலைக்கு ஆட்களை நியமிக்கும் போது  தானாகவே ஒப்பந்த ஊழியர்கள் விலக்கிக் கொள்ளப்படு வார்கள். எனவே இந்த ஒப்பந்த பணியாளர்கள் நியமனம்  குறித்து எந்த சந்தேகமும் தேவையில்லை.

இது சமூக நீதியை காக்கும் ஆட்சி. போக்குவரத்து துறையை உருவாக்கியது கலைஞர் தான். அவர் உரு வாக்கிய இந்த துறையை ஒருபொழுதும் தனியார்மய மாக்க விடமாட்டோம்” என்று தெரிவித்தார்.

எட்டு அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்

போக்குவரத்துத் துறை மானியக்  கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னதுரை, “அரசுப் பேருந்து களை அதிகப்படுத்த வேண்டும், பணி யாளர் நியமனத்தையும் தடுக்கும் நோக்  கோடு கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில்  போடப்பட்ட 8 அரசாணைகள் ரத்து செய்ய வேண்டும். போக்குவரத்துக் கழக  ஊழியர்களின் கோரிக்கைகளை பேச்சு வார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காண  வேண்டும். 15வது ஊதிய பேச்சுவார்த் தையை உடனடியாக துவக்க வேண்டும்”  என்றார். 

ஊதிய உயர்வு பேச்சுக்கு அரசு தயார்

இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்  சர் சிவசங்கர், “கடந்த அதிமுக ஆட்சி யின்போது புதிய ஊதிய உயர்வு குறித்து  11 முறை ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும் முடிவு எட்டப்  படவில்லை. அதன் பிறகு திமுக பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை மிகச் சிறப்பான முறையில் நிறைவேற்றியது. 

அந்த ஒப்பந்தத்தில் தொமுச வைத்த  கோரிக்கைகள் சிஐடியு முன்வைத்த கோரிக்கைகள், அண்ணா தொழிற்சங்கம்  உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்க ளின் கோரிக்கைகளும் ஏற்றுக் கொள் ளப்பட்டன. ஆனால், சிஐடியு தலைவர் சவுந்தரராசன் மட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடவில்லை. ஏனென்று தெரியவில்லை. ஆனால் மறு படியும் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை யை துவக்க வேண்டும் என்று அவர் கூறு வது எப்படி என்று எனக்கு தெரிய வில்லை. 

மக்களவைத் தேர்தல், சட்டமன்றக் கூட்டத்தொடர் என்று தொடர்ந்து பணி கள் இருந்ததால் ஒப்பந்தப் பேச்சு வார்த்தை நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்தப் பணிகள் முடிந்ததும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்த  அரசு தயாராக இருக்கிறது. ஏற்கெனவே  தொழிற்சங்கங்களுக்கும் சொல்லி  இருக்கிறோம். ஆகவே, விரைவில்  பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர் களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்றார்.