tamilnadu

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதத்தை பாடவேண்டும்

சென்னை, டிச. 10- அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பாட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து  மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு  செய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக் கப்படுவதாகவும், இதனால் விழாவில் பங்கேற்போர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது உதட்டளவில் கூட பாடு வதில்லை எனவும் குறிப்பிடப்பட் டுள்ளது. மேலும், எந்தவித தேசப்பற்றோ அல்லது தமிழ் உணர்வோ இல்லாமல் இயந்திரகதியில் எழுந்து நிற்பதாகவும் எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்படுகிறதோ அந்த  நோக்கம் சிதைந்து போவதாக அறியப்படு வதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில், பதிவு செய்யப்பட்ட தேசிய கீதத்திற்கு பதிலாக விழாவை நடத்துவோர் இதற்கென பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை பாடுவ தற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள் ளப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.