tamilnadu

img

நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை!

நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 1996 - 2001-ஆம் ஆண்டுகளில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசுக்குச் சொந்தமான 3,630 சதுர அடி நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில் செயல்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2003-ஆம் ஆண்டு அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இவ்வழக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்டவர்களில் பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, அப்போதைய அடையாறு சார் பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.