தமிழகத்தில் மகளிர்க்கான கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டத்தை பாஜக-வைச் சேர்ந்த திருப்பதி நாராயணன் விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர் மதிவதனி பதிலளித்துள்ளார். அதில், “ஏழை - எளிய பெண்களின் கட்டணமில்லாப் பயணம் பாஜக-வுக்கு ஒருபோதும் மகிழ்ச்சியை தராது; கார்ப்பரேட் நிறுவனங்களின் கண்களில் தூசி விழுந்தால் கூட நாராயணன் தொடங்கி பாஜகவில் அனைவரும் அழுக தொடங்கி விடுவர்! கேட்டால் இது ஏழைத் தாயின் மகன் ஆட்சி என்ற கட்டுக்கதை!” விடுவார்கள் என்று சாடியுள்ளார்.