சென்னை, மார்ச் 9- கோடை வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வழி முறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 வரை வெளியில் வர வேண்டாம் என வும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. வெயிலில் பணி புரிவோர் தினசரி 5 லிட்ட ருக்கும் அதிகமான தண்ணீரை குடிக்க அறி வுறுத்தப்பட்டுள்ளது. அதிக மாக வெயிலில் இருந்தால் ஹீட் ஸ்ட்ரோக், உடலில் நீர்சத்து குறைந்தால் சிறு நீரக செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மருத்துவ மனைகளில் போதுமான மருந்துகளைகையிருப்பில் வைத்திருக்க வேண்டும், என கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.