tamilnadu

img

தில்லாலங்கிடி ஆட்டக்காரன் - நவகவி

தில்லாலங்கிடி ஆட்டக்காரன்

தில்லாலங்கிடி ஆட்டக்காரன் ஓட்டு கேட்டு தெருவில் வாரான்   பாத்துக்கோ -தம்பி - பாத்துக்கோ! கொள்கை ஏது? ஒக்கிட்டி லேது! மூஞ்சிய பாத்து ஓட்டு போடு  கேட்டுக்கோ - சொல்றான்- கேட்டுக்கோ!  தற்குறியா ஆகலாமா பொதுஜனமே கூறு? ஜகா வாங்கி ஓடும் இவர் தளபதின்னு பேரு! (தில்லா) ராஜா இவர் திரு முகத்தை பாக்க ராப்பகலா ரசிகர் கூட்டம் காக்க  வாராரய்யா ஷோக்கா!  மேக்அப் போட்டு டீக்கா! மகாஜனம் இவரைப் பாத்து மாறலாமா பேக்கா? (தில்லா) நேரம் கழிச்சு வாரார் துரை பார்த்தையா? நெரிசலில் ஜனம் பிதுங்கும் கஞ்சி கஞ்சியா!  பொணம் விழுந்தா என்ன?  போய்ச்சேர்ந் தாருசென்ன! கால்சீட் தந்து கறாரா பணம் எண்ணி கணக்கு பண்ண! (தில்லா) ஓட்டு வாங்கி முதல்வர் ஆகும் முன்னே காவு வாங்கி வாரார் இவர் அண்ணே!  சுத்தி சங்கிக் கூட்டம்  போடுது பார் ஆட்டம்! ஹீரோ வில்லன் ஆனதால் நாடு குரங்கு புகுந்த தோட்டம்!  (தில்லா)