tamilnadu

img

உடலுறுப்பு தானம் செய்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு அரசுப் பணி வழங்குக! தமிழக முதல்வருக்கு சிஐடியு வேண்டுகோள்!

சென்னை, ஜூன் 7 - உடலுறுப்புக்களைத் தானம் செய்த டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்திற்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வருக்கு சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) மாநிலப் பொதுச்செயலாளர் கே. திருச்செல்வன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தூத்துக்குடி திரேஸ்புரம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வந்த மகாராஜன் தனது குடும்பத்தினருடன் கடந்த மே 30 அன்று இருக்கன்குடி கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் ஆட்டோவிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார்.

அவருக்கு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை  அளித்து, மேல் சிகிச்சைக்காக  பாளை யங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

ஆனாலும் அவரது உடல் நிலை யில் முன்னேற்றம் ஏற்படாமல், மூளைச் சாவு அடைந்தார். மகாராஜனின் குடும்பத் தினரிடம் மருத்துவர்கள் உடல் உறுப்பு களைத் தானம் செய்வது குறித்துப் பேசினர். இதையடுத்து குடும்பத்தினரும் மகாராஜனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். 

உடனடியாக நெல்லை அரசு மருத்துவ மனையில் மகாராஜனுக்கு அறுவை சிகிச்சை செய்து, அவரது கல்லீரல், கண்  கருவிழிகள், தோல் பகுதி ஆகியவை சேக ரிக்கப்பட்டு திருச்சி, மதுரையில் உள்ள தனி யார் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று, அங்குள்ள நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. கண் கருவிழிகள் நெல்லை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு பொருத்தப்பட்டது.

மரணித்த பின்னரும் பலருக்கு வாழ் வளித்துள்ள விற்பனையாளர் மகாராஜன் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்கு உத விடும் வகையில் அவரது குடும்பத்தினர் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டுமென முதல்வருக்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சிஐடியு) வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு கே. திருச்செல் வன் குறிப்பிட்டுள்ளார்.

;