tamilnadu

img

“இந்தி தெரியாது போயா”

சுமன் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள “ரகு தாத்தா” படத்தின் டீசர் வெளியாகி யுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற “இந்தி” எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசரில் இந்தித் திணிப்புக்கு எதிரான வச னங்களும் இடம்பெற்று உள்ளது. குறிப்பாக, “இந்தியை திணிப்போம் என கூறினால் இந்தி தெரியாது போயா என சொல்லுவோம்”, “இந்தி தெரிந்தால் தான் புரோமோஷனா” என நடிகை கீர்த்தி சுரேஷ் பேசும் வசனங்கள் டீசரில் கவனம் பெற்றுள்ளது. தற்போதைய சூழ்நிலையில்  தமிழ்நாட்டு திரைத்துறை  ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பின ரும் டீசரை வாழ்த்து மழையுடன் கொண் டாடி வருவதால் சமூகவலைத்தளத்தில் டாப் டிரெண்டிங்கில் உள்ளது “ரகு தாத்தா”.