tamilnadu

அதிவிரைவு ரயில்கள் விம்கோ நகரில் நின்று செல்ல நடவடிக்கை எடுத்திடுக

சென்னை, ஜூன் 25- வட மாநிலங்களுக்கு செல்லும் அதி விரைவு, விரைவு ரயில்கள் விம்கோ நகரில் நின்று செல்ல மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் வலியுறுத்தி யுள்ளார்.

இதுகுறித்து அவர் மாநகராட்சி மேயருக்கு எழுதியுள்ள கடிதத்தில், விம்கோ ரயில் நிலையத்தில் அதிவிரைவு, விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்பது வடசென்னை மக்களின் நீண்ட  நாள் கோரிக்கையாக உள்ளது. தற்போது மெட்ரோ ரயில் நிலையம், திருவொற்றி யூர் பேருந்து நிறுத்தம் விம்கோ நகர் ரயில் நிலையம் அருகில் இருப்பதால் வட மாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் விரைவு மற்றும் அதி விரைவு ரயில்கள் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் நின்று சென்றால், வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை ராயபுரம், ஆர்.கே.நகர், திருவொ ற்றியூர், எண்ணூர், மணலி, மாதவரம், மணலி புதுநகர், அத்திப்பட்டு, பட்ட மந்திரி, மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில் வாழும் பல லட்சக்கணக்கான மக்கள் பயன டைவார்கள்.

எனவே வடசென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகை யில், மாநகராட்சி நிர்வாகம் ரயில்வே துறை யிடம் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்  கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள் ளது.