நகரமைப்பு பிரிவு தொடர்பான கூர்ந்தாய்வு சேவைகள் நிறுத்தம்
சென்னை, ஜூலை 26- பெருநகர சென்னை மாநகராட்சியின் சேவைய கங்களை மாநில தரவு மையத்திற்கு இடம் பெயர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இணைய வழி சேவைகளின் பயன்பாடுகள் சேவைகளின் பாதுகாப்பு, கிடைக்கும் தன்மை அளவிடுதல் ஆகியவற்றை நவீனப்படுத்தி, மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனை யொட்டி, மாநகராட்சியின் நகரமைப்புப் பிரிவு தொடர்பான கூர்ந்தாய்வு சேவைகள் சனிக்கிழமை காலை 6 மணி முதல் வரும் 28ம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை நிறுத்தம் செய்யப்படவுள்ளது என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.