tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நயினாருக்கு மீண்டும் சம்மன்
சிபிசிஐடி முடிவு

சென்னை, ஜூன் 6- தாம்பரத்தில் நடைபெற்ற இந்த சோதனையின் போது, ரயிலில் பய ணித்த 3 பேரிடம், கணக்கில் காட்டப்  படாத ரூ. 4 கோடி பணம் பிடிபட்டது.  நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செல வுக்காக இந்த பணம் கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கு சிபிசிஐடி  பிரிவுக்கு மாற்றப்பட்டது.

பாஜக தலைவர் நயினார் நாகேந்தி ரனை நேரில் ஆஜராகும்படி மூன்று முறை  சம்மன் அனுப்பியும் அவர் வேண்டும் என்றே காலதாமதம் செய்து இழுத்த டிப்பு செய்து வருகிறார்.

இந்த நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் சிபிசிஐடி சம்மனை ஏற்று கேசவ  விநாயகம், எழும்பூரில் உள்ள சிபிசிஐடி  தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் துணை காவல் கண்காணிப்பா ளர் சசிதரன் தலைமையிலான போலீ சார் விசாரணை செய்தனர். அவர்  அளித்த பதில்கள் பதிவு செய்யப்பட்  டது. விசாரணை முழுவதும் வீடியோ வாகவும் பதிவு செய்யப்பட்டது. சுமார் 5 மணி நேர விசாரணைக்கு பின்னர் சிபி சிஐடி அலுவலகத்தில் இருந்து கேசவ விநாயகம் வெளியே வந்தார்.

இதற்கிடையே, விசாரணைக்கு ஆஜ ராகாத நயினார் நாகேந்திரன் உட்பட 3  பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபி சிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தேர்தல் நடைமுறை முடிவுக்கு வந்தது!

சென்னை, ஜூன் 6- மக்களவைத் தேர்தலை முன்னிட்டு  தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 16 அன்ற அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் வியாழக்கிழமையுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிகள் காரண மாக, ஒருவர் ரூ.50 ஆயிரத்துக்கு மேல்  பணம் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதிக மதிப்புள்ள பொருட்களை கொண்டு செல்லவும் கட்  டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பறக்கும்  படையினர், நிலை கண்காணிப்பு குழுக் கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வருமான வரித்துறையினரின் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் சோதனை நடத்தப்பட்டு வந்  தது. தற்போது இந்த தேர்தல் நடத்தை  விதிகள் திரும்பப் பெறப்பட்டன.

இனி பணம், பொருட் கள் கொண்டு  செல்வதில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை. அதுமட்டுமின்றி, அரசும்  வழக்கமான பணிகளை மேற்கொள்ள லாம்.

ஜூன் 7, 8 இல் நடைபெறவிருந்த ‘செட்’ தகுதி தேர்வு திடீர் ஒத்திவைப்பு

திருநெல்வேலி, ஜூன் 6- 2024 முதல் அடுத்த 3 ஆண்டு களுக்கு ‘செட்’ தேர்வு நடத்த  நெல்லை மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழகத்துக்கு தமி ழக அரசு அனுமதி வழங்கியிருக்கி றது. அதன்படி, ‘செட்’ தேர்வு ஜூன்  7, 8 (வெள்ளிக் கிழமை, சனிக்  கிழமை) ஆகிய 2 நாட்கள் நடை பெறும் என அறிவிக்கப்பட்டு இருந்  தது. இந்த தேர்வில் கலந்துக்  கொள்ள சுமார் 99 ஆயிரம் பேர் விண்ணப்பத்திருந்தனர். 

இந்த நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்க லைக் கழக பதிவாளர் தரப்பில் இருந்து வியாழனன்று திடீரென ஒரு அறிவிப்பு வெளியாகி உள்  ளது. அந்த அறிவிப்பில் தொழில் நுட்ப காரணங்களுக்காக உத விப் பேராசிரியர்கள் பணிக்காக நடத்தப்படும் மாநில அளவிலான தகுதி தேர்வு (செட்) ஒத்திவைக்கப்  படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்  ளது. தேர்வு நடத்தப்படும் தேதி  பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

முதன்முறையாக இந்த தேர்வு  இணைய வழியில் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

சொந்த தொகுதியில் இவ்வளவு தான் அண்ணாமலை செல்வாக்கு!

சென்னை, ஜூன் 6- பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை கரூர் மாவட்  டம் அரவக்குறிச்சி யை அடுத்த தொட் டம்பட்டியைச் சேர்ந்  தவர். இந்நிலை யில், கரூர் மக்கள வைத் தொகுதியில் பாஜக சார்பில் கரூர்  மாவட்டத் தலைவர் வி.வி. செந்தில்நாதன் போட்டியிட்டார். இந்த தொகுதிக்கு  உட்பட்ட அரவக்குறிச்சி சட்டமன்ற தொகு தியில் அதிமுக 44,342 வாக்குகளையும்,  காங்கிரஸ் 87,390 வாக்குகளையும் பெற்  றுள்ளன. அதே நேரத்தில், பாஜக  19,978 வாக்குகள் மட்டுமே பெற முடிந்  துள்ளது. குறிப்பாக, அண்ணாமலை யின் சொந்த தொகுதியான அரவக்குறிச்சி  சட்டமன்ற தொகுதியில் பாஜக வின் வாக்குகளை விட 4 மடங்கு அதிக மான வாக்குகளை காங்கிரஸ் பெற் றுள்ளது.

விருதுநகர் தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை
சத்யபிரதா சாகு தகவல்

சென்னை, ஜூன் 6- “தேர்தல் முடிவு களில் சந்தேகம் இருந்தால் நீதிமன் றத்தைத் தான் நாட முடியும்” என்று தமி ழக தலைமைத் தேர்  தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் சத்யபிரத சாகுவை சந்தித்த செய்தியா ளர்கள், ‘விருதுநகரில் விஜய பிரபா கரன் தோற்கவில்லை. தோற்கடிக்கப் பட்டார். வாக்கு எண்ணும் மையத்தில் முறைகேடுகள் நடந்தது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இரண்டு மணி  நேரம் வாக்கு எண்ணிக்கை நடைபெற வில்லை’ என்று தேமுதிக பொதுச்செய லாளர் பிரேமலதா குற்றச்சாட்டுகள் கூறி யது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர்,“ தேர்தல்  முடிவுகளில் சந்தேகம் இருந்தால் நீதி மன்றத்தைத் தான் நாட முடியும். விருது நகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்  படுவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண் டும். எனினும், விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுவது தொடர் பாக தேமுதிகவின் எந்தப் புகாரும் இது வரை கிடைக்கவில்லை” என்றார்.