tamilnadu

img

மின் கட்டண உயர்வை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

புதுச்சேரி, ஜூலை 7- மின்கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும். வீட்டுவரி, குடிநீர்வரியை குறைக்க வேண்டும், பொது விநியோக முறையை பலபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக உழவர்கரை நகராட்சிக்கு ட்பட்ட கருவடிக்குப்பம் லாஸ்பேட் சாலையில் நடைபெற்ற தீப்பந்த போராட்டத்திற்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உழவர்கரை நகரக்குழு செயலாளர் ஆர்.நடராஜான் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பி னர் வெ.பெருமாள் போராட்ட த்தை துவக்கி வைத்து பேசினார்.  செயற்குழுஉறுப்பினர் சத்தியா, பிரதேசக்குழு உறுப்பினர் ஆனந்து உள்ளிட்ட பலர் போராட்ட த்தில் கலந்து கொண்டனர்.