மாநில கராத்தே போட்டி: அங்கீகாரம் இல்லாத சங்கத்தை அனுமதிக்க எதிர்ப்பு
சென்னை, ஆக.22 பள்ளி கல்வி துறை சார்பில் இந்த ஆண்டு (2025) நடைபெற இருக்கும் மாநில கராத்தே தேர்வு போட்டி களை அங்கீகாரம் இல்லாத கராத்தே சங்கத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் காரத்தே வீராங்கனைகள் பாதுகாப்பு நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அச் சங்கத்தின் நிறுவனர் மு.தனசேகரன் அளித்துள்ள மனுவில் விவரம் வருமாறு: தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆண்டு தோறும் நடைபெறும் மாநில கராத்தே தேர்வு போட்டிகளை அங்கீகாரம் இல்லாத தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேஷன் (டிஎஸ்கேஏ) சங்கத்திற்கு வழங்க வேண்டாம். காரணம், வீரர்கள் தேர்வு செய்வதில் அங்கீகாரம் இல்லாத டிஎஸ்கேஏ சங்கத்தை சேர்ந்தவர்கள் நடுவர்கள் செயல்படுவதால் திறமையான கராத்தே வீரர்களை தேர்வு செய்வதில்லை. எனவே, பள்ளி கல்வி துறையில் பணியாற்றி வரும் விளை யாட்டு மற்றும் பிடி ஆசிரியர்களை நடுவர்களாக நியமிக்க வேண்டும். அப்போதுதான், திறமையான கராத்தே வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் கராத்தே விளையாட்டுக்கு அங்கீகாரம் இருப்பதாக பொய் சொல்லி பல ஆண்டுகளாக அப்பாவி ஏழை, எளிய மாணவர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் ஊழல் செய்து வரும் டிஎஸ்ஏகே கராத்தே சங்கத்திற்கு அனு மதி வழங்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.