ஶ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
16-வது பட்டமளிப்பு விழா
ஶ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, அதன் 16-வது பட்டமளிப்பு விழாவை மிகச்சிறப்பாக நடத்தியது. இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை வெற்றிகரமாக முடித்து தேர்ச்சி பெற்றிருக்கும் 860 மாண வர்களின் கல்விசார் சாதனைகள் மற்றும் அர்ப்பணிப்பிற்கான அங்கீகார மாக இந்த பட்டமளிப்பு நிகழ்வு அமைந்திருந்தது. கல்லூரியில் சிறப்பான திறனை மாணவர்களுக்கும், பல்கலைக்கழக அளவில் தேர்வில் முதலிடம் பிடித்தவர்களுக்கும் மற்றும் பரிசுக்கான தேர்வுகளில் வெற்றிவாகைச் சூடியவர்களுக்கும் இவ்விழாவின்போது தங்கப்பதக்கங்களும், எண்டோன் மெண்ட் பரிசுகளும் வழங்கப்பட்டன. மொரிஷியஸ் முன்னாள் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி விழா வின் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் ஒன்றிய அமைச்சரும் மக்களவை உறுப்பினருமான டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன், இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார். பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் முகமது ரேலா பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இதன் தலைவர் ஜெ. ஶ்ரீநிஷா, நிர்வாக இயக்குநர் என்.இளமாறன், துணை வேந்தர் எம்.சுந்தரராஜன், பதிவாளர் எஸ். பூமிநாதன் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.