tamilnadu

​​​​​​​சென்னை முக்கிய செய்திகள்

விண்ணை தொட்ட விமான கட்டணங்கள்

சென்னை, ஆக. 14- சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 -ந் தேதி வியாழக்கிழமை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அடுத்த 3 நாட்களையும் சேர்த்து தங்களது சொந்து ஊர்களுக்கு சென்றனர்.

இதன் காரணமாக ரயில் மற்றும் பேருந்துகளிலும் மக்கள் கூட்டத்தை காணமுடிந்தது. சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. 

இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்வோருக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக விமான கட்டணங்கள்  உயர்ந்துள்ளது. 

சென்னை - தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.4,301 ஆனால் புதன் மற்றும் வியாழக்கிழமை ரூ.10,796 அதேபோல் சென்னை - மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,063 ஆனால் ரூ.11,716 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை - திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.2,382 ஆனால் ரூ.7,192 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை - கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,369. இது  ஆக உயர்ந்துள்ளது. சென்னை- சேலம் வழக்கமான கட்டணம் ரூ.2,715 ஆனால் புதன் மற்றும் வியாழக்கிழமை ரூ.8,277ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தங்கம் விலை குறைந்தது

சென்னை,ஆக.14- தங்கத்தின் விலை புதனன்று  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.52,440-க்கு விற்பனை செய்யப்படு கிறது. தங்கம் விலை கிரா முக்கு ரூ.10 குறைந்து ரூ.6,555-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை குறைந் துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.88.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.