tamilnadu

img

குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டம்: பிச்சாவரம் படகு ஓட்டுநர்கள் முடிவு

குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டம்: பிச்சாவரம் படகு ஓட்டுநர்கள் முடிவு

சிதம்பரம், அக்.14- பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு ஓட்டுநர்கள் தங்களது குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்த போவதாக சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலா மையத்தில் படகு ஓட்டுநர்கள் சிஐடியு சங்க கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் சிறப்புத் தலைவர் எஸ்.ஜி ரமேஷ்பாபு தலைமை வகித்தார். இதில்,சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன், தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆழ்வார், பரங்கிப்பேட்டை ஒன்றியக் குழு உறுப்பினர் திருஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், பிச்சாவரம் படகு மையத்தில் புதிதாக இயந்திர படகு 5,  துடுப்பு படகு 15 வாங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் படகின் மோட்டார் எஞ்சின் சர்வீஸ் செய்ய வேண்டும்.  வருடத்திற்கு 2  சீருடைகள் ஓட்டுநர்களுக்கு வழங்க வேண்டும்,  இயந்திர படகு ஓட்டுநருக்கு ஒரு நாளைக்கு ரூ 250, துடுப்பு படகு ஒரு நாளைக்கு ரூ 200 கமிசன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18 ஆம் தேதி குடும்பத்துடன் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது தீர்மானிக்கப்பட்டுள்ளது.