tamilnadu

img

தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றைச் சாளர முறை அனுமதி கட்டணம் அறிவிப்பு  

தொழில் நிறுவனங்களுக்கான அனைத்து அனுமதிகளும் ஒற்றைச் சாளர முறையில் பெறுவதற்கான கட்டண விவரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.      

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு சார்ந்த 40க்கும் மேற்பட்ட துறைகள் மற்றும் அமைப்புகளின் சேவைகளை ஒரே இடத்தில் ஒருமுறை செலுத்தும் கட்டணத்தின் மூலம் பெற முடியும். மேலும் நிறுவனங்களின் முதலீடுகளுக்கு ஏற்ப கட்டணங்களையும் வெளியிட்டுள்ளது.  

அந்த வகையில் ரூ.10 கோடி வரை தொழில் விரிவாக்கம் செய்வதற்கு கட்டணம் எதுவும் இல்லை. ரூ.10 கோடியிலிருந்து ரூ.50 கோடி வரை விரிவாக்கம் செய்தால், ரூ.2.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும்.    

ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை தொழிலை விரிவாக்கம் செய்தால், 5 லட்சம் ரூபாயும், ரூ.100 கோடி முதல் ரூ.300 கோடி வரை விரிவாக்கம் செய்தால், 10 லட்சம் ரூபாயும் செலுத்த வேண்டும்.

ரூ.300 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை 15 லட்சம் ரூபாயும், ரூ.1,000 கோடிக்கும் மேல் விரிவாக்கம் செய்தால் 20 லட்சம் ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.