சிறைவாசியின் மகளுக்கு உதவித்தொகை வேலூர்,
மே 23 – வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனு பவித்து வரும் நன்னடத்தைச்சிறைவாசி பா.முருகன் மகள் மதுமிதாவுக்கு உயர்கல்வி பயிலுவதற்காக ரூ. 11 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. தமிழ்நாடுமுன்னாள் சிறைவாசிகள் ஆதரவுச் சங்கத் துணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான டி.எம்.விஜய ராகவன், மாணவியிடம் உதவித்தொகையை வழங்கினார். இந்தநிகழ்ச்சியில், சிறைக் கண்காணிப்பாளர் பி.தர்ம ராஜ், சங்கச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், சங்கப் பொருளாளர் ஆர்.சீனிவாசன்,சிறை நல அலுவலர் ஆர்.மோகன், அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் பேராசிரியர் அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் 10 பேர் காயம்
அணைக்கட்டு, மே 23- வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட ஊசூர் அடுத்த பூதூர் ஊராட்சி கோவிந்தரெட்டிபாளையம் கிராமத்தில் காளை விடும் திருவிழா வெள்ளியன்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சிவகுமார் தலைமை தாங்கினார். தாலுக்கா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவ சங்கர் தலைமையில் வருவாய் துறையினர், காவல்துறை யினர் உறுதிமொழி ஏற்றதை தொடர்ந்து காலையில் தொடங்கியது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த 83 மாடுகள் பங்கேற்றது. கோடைகால விடுமுறை என்ப தால் கல்லூரி மாணவர்கள் உட்பட ஏராளமான பார்வையா ளர்கள் திரண்டு விழாவை உற்சாகத்துடன் கண்டு ரசித் தனர். சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் உற்சாக த்துடன் விரட்டினர். தொடர்ந்து விழா பகல் 1.30 மணிக்கு முடிக்கப்பட்டது. விழாவில் மாடு முட்டியது, மாட்டின் கயிறு கழுத்து, கால் பகுதியில் சிக்கி காயம் ஏற்பட்டது உட்பட பார்வையாளர்கள் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் படு காயமடைந்த 4 பேருக்கு அங்கு முகாமிட்டிருந்த நடமாடும் மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரியூர் போலீசார், அணைக்கட்டு போலீசார் உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசருக்கு குவிக்கப்பட்டு பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மூத்தப் பத்திரிகையாளர் நவசக்தி சோமு காலமானார்
சென்னை, மே 23 - மூத்தப் பத்திரிகையாளர் நவசக்தி சோமு என்கிற சோம சுந்தரம் சென்னையில் வெள்ளி யன்று (மே 23) காலமானார். அவருக்கு வயது 86. இளம் வயதிலேயே பத்திரிகை துறையைத்தெரிவு செய்தஅவர் நவசக்தி இதழில் பணியில் சேர்ந்தார்பின்னர் தினமணி, தினமலர் போன்ற பத்திரிகைகளிலும் பணியாற்றினார். ஓய்வு பெற்ற பின்னரும் சக பத்திரிகையாளர்களோடு தொடர்பில் இருந்ததோடு சிறு சிறு செய்திகளை எழுதியும் வந்தார். சாலை விபத்தில் சில நாட்களுக்கு முன் படுகாயமடைந்த சோம சுந்தரம், சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு மனைவி, மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது மகள்களில் ஒருவரான எம்.எஸ்.கோமதி சிறிது காலம் தீக்கதிரில் பணியாற்றினார். இதைத் தொடர்ந்து தற்போது பாரதி புத்தகாலயத்தில் தட்டச்சு மற்றும் வடி வமைப்பு ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
மது பாட்டில்கள் கடத்திய இருவர் கைது மதுராந்தகம்
மே 23- மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்பொழுது பாண்டிச்சேரி இருந்து சென்னை நோக்கி வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் வெளிமாநில மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.